E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1279/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 1279/ '16

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) தமது குடியிருப்புக்காக அல்லது பயிர்ச் செய்கைக்காக அல்லது வர்த்தக நடவடிக்கைகளுக்காக மரபுரிமைக் காணிகளைக் கொண்டிருக்காத மக்கள் அரசுக்குச் சொந்தமான காணிகளைத் தமது பயன்பாட்டுக்காக அனுமதியின்றி பயன்படுத்துகின்றனர் என்பதையும்;

      (ii) காலப் போக்கில் அவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்ற காணிகளை அரச உரிமையிலிருந்து அகற்றி, முறைசார்ந்த விதத்தில் கையளிக்கும் நடைமுறையொன்று ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் பேணிவரப்பட்டது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அதன் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மாத்தறை மாவட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உறுதிகள், அளிப்புப் பத்திரங்கள், உரித்துப் பத்திரங்கள் அல்லது உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையானது மாத்தறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;

      (iii) மாத்தறை மாவட்டத்தில் அரச காணிகளை அனுமதியின்றிப் பயன்படுத்துகின்ற, இருப்பினும், எதுவித சட்ட ரீதியான ஆவணத்தையும் கொண்டிராத ஆட்களின் எண்ணிக்கை, பிரதேச செயலாளர் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;

      (iv) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு அளிப்புப் பத்திரத்தை அல்லது ஆகக் குறைந்தது உரிமப் பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-22

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-04

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks