பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1284/ '16
கௌரவ டலஸ் அலஹப்பெரும,— தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு ,— (1)
( அ) (i) தெவிநுவர, வெஹெல்கொட, 'பிரேமசிறி', இல்லத்தில் வசிக்கும், திரு. எச். கே. பிரேமதிலக்க 1978.05.05 தொடக்கம் 1986.11.10 வரை இலங்கை விமானப்படையில் தொண்டர் சிப்பாயாகவும், 1986.11.03 தொடக்கம் 1995.11.30 வரை தொழில் திணைக்களத்தில் மேசன் பயிற்சி ஆலோசகராகவும், 1995.11.30 தொடக்கம் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் இணைந்து பணியாற்றினார் என்பதையும்;
(ii) 60 வயது நிறைவடைந்தமையால் 2015.09.18 ஆம் திகதி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து ஓய்வு பெறச்செய்யப்பட்டுள்ளார் என்பதையும்;
(iii) அரச சேவையில் 33 ஆண்டுகள் 04 மாதங்கள் 13 நாட்கள் பணிபுரிந்த போதிலும் அவரின் ஓய்வூதியம் கணிப்பீடு செய்யப்படவில்லை என்பதையும்;
(iv) தொழில் திணைக்களத்தில் பணிபுரிந்த காலத்துக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள், இவர் தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கு எந்த தொகுதியின் கீழ் விடுவிக்கப்பட்டார் என்பது தெளிவில்லை எனும் கருத்தின் அடிப்படையில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும்;
(v) பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதிய PNS/P/P7/PEN/PROB(ii)/TEM ஆம் இலக்க 2016.07.14 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அவதானிப்புக்கள் கோரப்பட்டுள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) திரு. பிரேமதிலக்கவின் ஓய்வூதிய உரித்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-24
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-24
பதில் அளித்தார்
கௌரவ ரவீந்திர சமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks