பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ டலஸ் அழஹப்பெரும,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) அரச போக்குவரத்தின் பிரதானதொரு ஆக்கக்கூறாக விளங்கும் இபோச பேருந்து சேவையை, தனியார் துறை பேருந்து சேவைக்கு போட்டியானதொரு சேவையாக பேணிவருவதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்கிறாரா?
(ஆ) (i) 2014.12.31 ஆம் திகதி உள்ளவாறு மாத்தறை மாவட்டத்தின் இபோச பஸ் டிப்போக்களுக்கு சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கை;
(ii) 2016.06.01 ஆம் திகதி உள்ளவாறு ஒவ்வொரு தொழிலின் அடிப்படையில் மேற்படி ஒவ்வொரு டிப்போவிலும் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை;
(iii) 2015.01.01 ஆம் திகதிக்கு பின்னர் மாத்தறை மாவட்டத்தின் இபோச பஸ் டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை;
ஒவ்வொரு டிப்போவிற்கு அமைவாக தனித்தனியாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மாத்தறை மாவட்டத்தின்,
(i) இபோச பஸ் டிப்போக்களின் வருடாந்த புரள்வு;
(ii) இ.போ.ச.வினால் சேவை வழங்கப்படுகின்ற வீதிகளின் கிலோமீற்றர் அளவு;
ஒவ்வொரு வருடத்திற்குமேற்ப தனித்தனியாக எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) (i) பயணிகளின் தேவைக்கேற்ப மாத்தறை மாவட்டத்தினுள் மேலும் எத்தனை பஸ் டிப்போக்களை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதென்பதையும்;
(ii) அதற்காக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-06
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-06
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks