E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1294/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. 1294/ '16

      கௌரவ டலஸ் அழகப்பெரும,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சட்ட ரீதியிலான உரிமையின்றி மாத்தறை மாவட்டத்தில் இற்றைவரை அரச காணிகளில் வசிக்கும் அல்லது பயிர் செய்கை மேற்கொள்ளும் ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அந்த எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கையில் எத்தனைபேருக்கு காணி உறுதிகள் அல்லது உரிமப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மாத்தறை மாவட்டத்தில் அரச காணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிகள் அல்லது உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (vi) மேலே (v) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-07

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-09

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks