E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1302/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. கெளரவ டளஸ் அழஹப்பெரும,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான வீதிகளின் கிலோ மீற்றர் அளவு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைய தனித்தனியே யாது என்பதையும்;

      (ii) மேற்படி அளவானது, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தரப்படுத்தல்களுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் காப்பட் இடப்பட்ட தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான மாத்தறை மாவட்டத்தின் வீதிகளின் கிலோ மீற்றர் அளவு ஆண்டுகளின் அடிப்படையில் தனித்தனியே யாது என்பதையும்;

      (iv) தென் மாகாண சபைக்கு உரித்தான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், பராமரிப்பதற்கும் நிதி ஏற்பாடுகளை வழங்குகின்ற மூலங்கள் யாவை என்பதையும்;

      (v) 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேற்படி மூலங்களின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மாகாண வீதிகளின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட பணத் தொகை ஒவ்வொரு மூலத்துக்கும் அமைய தனித்தனியே யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-05-24

பதில் அளித்தார்

கௌரவ பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks