E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1303/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. கௌரவ டலஸ் அழகப்பெரும,— கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை,

      (i) அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு யாதென்பதையும்;

      (ii) நெல் கொள்வனவுக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் ஒரு கிலோவுக்காக விவசாயிகளுக்கு செலுத்தப்பட்ட விலை யாதென்பதையும்;

      ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை,

      (i) மாத்தறை மாவட்டத்தின் ஒட்டு மொத்த நெல் அறுவடை யாதென்பதையும்;

      (ii) அரசாங்கத்தினால் மாத்தறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு யாதென்பதையும்;

      ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-09

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-09

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks