E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1309/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

    1. கௌரவ டலஸ் அழகப்பெரும,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாதென்பதையும்;

      (iii) 2014.12.31 ஆம் திகதி வரை பிரதேச நிலையங்களால் வழங்கப்பட்டுள்ள குடிமனை மற்றும் வர்த்தக நீர் இணைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iv) 2015.01.01 ஆம் திகதி தொடக்கம் இற்றைவரை மேற்படி பிரதேச நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நீர் இணைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (ii) 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள குடிநீர் விநியோக கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) இன்றளவில் மாத்தறை மாவட்டத்தில் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iv) இவர்களுக்கு குடிநீர் இணைப்புகளை வழங்கும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-11

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks