E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1311/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. கௌரவ எம். எச். எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தனமானப் பத்திரிகையின் பிரதி ஒன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்குகின்ற மொத்த நிலப்பரப்பு யாதென்பதையும்;

      (iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (v) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளின் இலக்கங்கள் மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்படுகின்றபோது உத்தியோகபூர்வமாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் எதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்படுத்தல்கள் வேறொரு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்தகைய கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், இலக்கங்கள் உட்பட்ட விபரங்களைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவொன்று அல்லது உப செயலாளர் பிரிவொன்று தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதற்குரிய வர்த்தமானப் பத்திரிகையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-04

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks