பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014.01.09 மற்றும் 2014.07.01 ஆகிய திகதிகளில் 03 வருடங்களுக்கு எனக் கூறி 175 பேரும், 2014.11.14 ஆம் திகதி கால வரையறையின்றி மேலும் 14 பேரும், 2016.10.20 ஆம் திகதி 02 பெண்கள் மற்றும் 03 ஆண்களும், பல்திறன் பயிலுனர்களாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;
(ii) இவர்கள் ஒரு வருடத்திற்கு 07 அமய லீவுகளுக்கும், 14 சுகவீன லீவுகளுக்கும் உரித்துடையவர்களாவர் என அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அமைச்சரின் ஆலோசனையின் பேரில் 2015 யூலை மாதம் வாய்மூலப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டதென்பதையும்; இதில் 30 பேர் பங்கேற்றுள்ளார்கள் என்பதையும்; இவர்கள் தொழில்வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
(ii) 2016.06.16 ஆம் திகதிய பணிப்பாளர் சபைத் தீர்மானத்திற்கு அமைய, சகல வெற்றிடங்களும் பயிலுனர்களைக்கொண்டே நிரப்பப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு செய்யாது அமைச்சரினால் பாதுகாப்புப் பிரிவுக்கு 95 பேரும், பின்னர் 120 பேரும் மற்றும் அதன் பின்னர் மேலும் 600 பேரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு வேலை உதவியாளர்/எழுதுவினைஞர் பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-21
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-21
பதில் அளித்தார்
கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks