பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக அமுல்படுத்தப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விடயப் பொறுப்பு அமைச்சரினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வரவு செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவான தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மாதாந்தம் ரூபா 2,500/- ஐ சேர்ப்பதானது, கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும்;
(ii) குறைந்தபட்சம் அடிப்படைச் சம்பளத்தை நாளொன்றுக்கு ரூபா 500/- உடன் ரூபா 1,000/- வரை அதிகரித்திருக்க வேண்டும் என்பதையும்;
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(இ) (i) ஆமெனில், மேற்படி நிலைப்பாட்டில் இருந்தவாறு மேற்படி அதிகரிக்கப்பட்ட தொகையைச் செலுத்தாத முதலாளிமாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா;
(ii) கூட்டு ஒப்பந்தம் ஒன்று உள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாதிருப்பது, கூட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், சலுகைக் கொடுப்பனவுச் சட்டத்தை விட அதிக நன்மை அளிப்பதாக உள்ள சந்தர்ப்பங்களில் ஆகும் என்பதை ஏற்றுக் கொள்வாரா;
(iii) இன்றேல், கூட்டு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டமைக்கான காரணம் யாது;
(iv) இந்த ரூபா 2,500/- கொடுப்பனவுக்கு சமமானதொரு தொகை ஏற்கனவே ஒருசில தனியார் தோட்ட நிருவாகிகளால் அவர்களின் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படுகின்றது என்பதை அறிவாரா;
(v) ஆமெனில், தோட்டக் கம்பனிகளால் இத்தொகையை செலுத்த முடியாதென அவர்கள் கூறுகின்ற கூற்றை ஏற்றுக் கொள்கின்றீரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-22
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks