E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1339/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. கௌரவ எம். எச். எம். சல்மான்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1992 ஆம் ஆண்டில் பொலனறுவை மாவட்டத்தில் பல்லியகொடெல்ல மற்றும் அக்பர்புரம் ஆகிய கிராமங்களுக்கு புலிப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் உயிரிழந்த, வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த அல்லது வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்தவர்களிடையே அப்போது குடும்பத்தின் பிரதான குடியிருப்பாளர்களாக இனங்காணப்பட்டிருந்த ஆட்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அமைச்சின் பொதுவான அளவுகோல்களில், உப குடும்பங்களாகக் கருதும் முறையியலின் காரணமாக மேற்படி பயங்கரவாத தாக்குதலைச் சந்தித்தபோது 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், DPS/DD-3/Housing Proj/2016 இன் கீழ் அமுலிலுள்ள, அச்சுறுத்தலுக்கு உள்ளான கிராமங்களில் மீள்குடியேற்றத்திற்கான வீடு பெறுனர்களை தெரிவுசெய்யும்போது அப்போது பராயமடையாத வயதினராயிருந், தற்போது ஒரு குடும்பமாக வாழும் ஆட்களை உப குடும்பங்களாக அங்கீகரிக்க ஆலோசனை வழங்குவாரா என்பதையும்;

      (v) மேற்படி உப குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-07

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-07

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks