E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1340/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. 1340/ '16

      கௌரவ அஜித் மான்னப்பெரும,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின், நெரியம்மடுவ பிரதேசத்தின், 6 ஆம் கட்டை, படைக்காடு, உன்னிச்சிய பிரதேசத்தில் அமைந்துள்ள 30 ஏக்கர் பரப்பளவுடைய வயற்காணி 99 ஆண்டு கால குத்தகையின் அடிப்படையில் அரசாங்கத்தினால் 1956.09.30 ஆம் திகதியன்று, அச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு, பன்சல வீதி, 34 ஆம் இலக்கத்தில் வசித்த திரு. தர்மதாச தென்னஹேவாவுக்கு வழங்கப்பட்டிருந்ததென்பதையும்;

      (ii) பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக 1987 ஆம் ஆண்டளவில் திரு. தர்மதாச தென்னஹேவாவுக்கும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் அப்பிரதேசத்திலிருந்து வௌியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்பதையும்;

      (iii) மேலே கூறப்பட்ட வயற்காணிக்கு ஏற்புடையதான 99 ஆண்டு குத்தகை தொடர்ந்தும் செல்லுபடியானதாக உள்ளதென்பதையும்;

      (iv) மேற்படி வயற்காணி தற்போது மட்டக்களப்பு, லேக் ரோட் 2, இலக்கம் 66 இல் வசிக்கும் கந்தையா யோகவேல் என்பவரால் சட்டவிரோதமானமுறையிலும் பலாத்காரமாகவும் இருப்பாட்சி செய்யப்பட்டு வருகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வயற்காணியை சட்டவிரோதமான முறையில் இருப்பாட்சி செய்து வருபவரை அகற்றி சட்டபூர்வமாக அக்காணியின் இருப்பாட்சிக்கு உரித்துடைய, மரணமடைந்த திரு. தர்மதாச தென்னஹேவாவின் பின்னுரித்தாளிகளுக்கு இதன் உடைமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) இன்றேல் அதற்கான காரணம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-22

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks