பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1345/ '16
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (I) கடந்த அரசாங்கத்தினால் ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனிக்கு A350 ரக மூன்று விமானங்களை கொடுப்பனவு அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து பெறுவதற்கு கொள்வனவுக் கட்டளை அனுப்பப்பட்டிருந்ததென்பதையும்;
(ii) புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்படி கொள்வனவுக் கட்டளை இரத்துச் செய்யப்பட்டதென்பதையும்;
(iii) கொள்வனவுக் கட்டளையை பெற்றுக்கொண்ட AerCap நிறுவனம் உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்காக டொலர் 97 மில்லியன் இழப்பீட்டுத் தொகையொன்றை கோரியிருந்ததென்பதையும்;
(iv) விமானங்கள் கொள்வனவு செய்யப்படாத பட்சத்தில், அவற்றை வேறு விமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான இயலுமை காணப்படுகையில், அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இழப்பீடு செலுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு 2016.09.07 ஆம் திகதியன்று அமைச்சரவை உப குழுவினால் தீர்மானிக்கப்பட்டது என்பதையும்;
(v) மேற்படி விமானங்களை பிறிதொரு விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்தல் அல்லது AerCap நிறுனத்தினால் கோரப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை குறைத்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாது மற்றும் அமைச்சரவை அங்கீகாரமின்றி திரு. சரித்த ரத்வத்தேயினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றுக்கு அமைய மேற்படி தொகையை செலுத்துவதற்கு பிரதம அமைச்சரின் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) அதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் பொருளாதார பாதிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-10
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-10
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks