பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ டலஸ் அழகப்பெரும,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான மொத்தக் காணிகளின் அளவு ஒவ்வொரு நகரத்தின் அடிப்படையில் தனிதனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தக் காணிகளின் அளவில் குத்தகை அடிப்படையில் அல்லது வேறு ஏதேனுமோர் அடிப்படையில் தற்போது திணைக்களத்தின் உபயோகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு,
(i) ஏற்புடைய பரப்பளவு;
(ii) ஏற்புடைய பூகோள ஆளுகைப் பிரதேசம்;
(iii) ஏற்புடைய அடிப்படை;
(iv) திணைக்களத்தின் உபயோகத்திலிருந்து நீக்கப்பட்ட திகதி;
ஆகியவற்றுக்கு அமைய தனிதனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்க, விற்பனை செய்ய அல்லது திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தற்போது ஏதேனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், குறித்த காணிகள் யாவை;
(iii) ஏற்புடைய காணிகளை நீக்குவதற்கான அடிப்படை யாது;
(iv) குத்தகை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ள காணிகளின் ஒரு பர்சஸிற்கு தற்போது அறவிடப்படுகின்ற குத்தகைத் தொகை யாது;
(v) குத்தகை செலுத்துவதை புறக்கணித்துள்ள காணிகளின் எண்ணிக்கை யாது;
(vi) குத்தகை செலுத்துவதை புறக்கணித்துள்ளமை தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-10
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks