பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உயிர் முறைமை தொழில்நுட்பவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்று, 2015 ஆம் ஆண்டு முதற் தடவையாக க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றி, அதில் உயர் மட்ட பெறுபேறுகளைப் பெற்றுள்ள இரத்தினபுரி மாவட்ட மாணவர்கள் இதுவரை எந்தவொரு பல்கலைக் கழகத்திற்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும்;
(ii) மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்கலைக்கழக கைநூலில் மேற்படி பாடம் தொடர்பான பட்டப் பாடநெறிக்கு சப்பிரகமுவ பல்கலைக்கழகம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், மேற்படி பல்கலைக்கழகத்திற்கு இதுவரை எந்தவொரு மாணவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும்;
(iii) மேற்படி மாணவர்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி கொழும்பு போன்ற வசதிகள் மிக்க மாவட்டங்களிலிருந்து குறைந்த Z புள்ளியின் கீழ் மாணவர்கள் 80 – 90 பேருக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்துள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக சனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்வித நீதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
(ii) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-06
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks