E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1365/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

    1. கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஒவ்வொரு மாவட்டத்துக்குமென மேலதிக அரசாங்க அதிபர் (அபிவிருத்தி) பதவியொன்றும் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்குமென உதவி பிரதேச செயலாளர் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி) பதவியொன்றும் என்றவாறு புதிய பதவிகளை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும், இதற்கு இலங்கை பொது நிருவாக சேவை உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஏற்றுக்கொள்வாரா;

      (ii) இலங்கையில் தற்போது காணப்படும் நாடளாவிய சேவைகளில் இலங்கை திட்டமிடல் சேவையும் ஒன்றாக உள்ளதோடு, இச்சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு தகுந்த பதவிகள் உருவாக்கப்படாமையால், முதலாம் தரத்தைச் சேர்ந்த அநேக உத்தியோகத்தர்கள் தரம் II மற்றும் தரம் III பதவிகளில் கடமை புரிகின்றனர் என்பதை அறிவாரா;

      (iii) ஆகையால், புதிதாக உருவாக்கப்படவுள்ள இப்பதவிகளை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-07

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-07

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks