E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1368/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அண்மையில் தரமுயர்த்தப்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்துடன் எட்டு தேசிய பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை கல்வி வலயத்தில் உள்ளனவென்பதையும்;

      (ii) இதுவரை மேற்படி தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படவில்லையென்பதையும்;

      (iii) மேற்படி பாடசாலைகளில் நிரந்தர அதிபர்கள் உள்ளனரென தவறான தகவல்கள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளனவென்பதையும்;

      (iv) கல்வி அமைச்சின் சீரான மேற்பார்வையின்றி மேற்படி பாடசாலைகள் இயங்குவதாக இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களின் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயமாக பட்டதாரிகளாக இருக்க வேண்டுமென்ற பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவின் கட்டளையின் பிரகாரம், மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகளுக்கு தகுதியான நிரந்தர அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனின், இது நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-08

பதில் அளித்தார்

கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks