E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1370/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறையை ஒழுங்குமுறையாக்குவதற்கு தேவையான "ஒழுங்குமுறையாக்கல் அதிகாரசபை" ஒன்று தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அத்திகதி யாதென்பதையும்;

      (iii) இலங்கையில் நுண் நிதி நிறுவனங்களை பதிவு செய்யும்போது ரூபா 25,000/- கட்டணமொன்றைச் செலுத்த வேண்டுமா என்பதையும்;

      (iv) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்கு ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அக்குழுவின் உறுப்பினர்கள் யாவர் என்பதையும்;

      (vi) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கடன் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில், அரசாங்கம் ரூபா 500 மில்லியன் தொகை ஆரம்ப நிதியத்தை வழங்கியதா என்பதையும்;

      (vii) சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறைக்கு சலுகை வட்டிவீதத்தின் கீழ் நிதி வசதிகளை வழங்குவதற்கான உதவியாக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து ரூபா 100 மில்லியன் கடன் வசதி கிடைத்துள்ளதா என்பதையும்;

      (viii) ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் வசதியின் கீழ், கடன் வழங்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-05

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-04

பதில் அளித்தார்

கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks