E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1381/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1.  

      கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டத்தின் 149 ஆம் இலக்க முன்மொழிவின் படி அநுராதபுரம், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கமத்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன் உற்பத்தி வலயங்களை நிறுவுவதற்கு ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (ii) இந்த மூன்று கருத்திட்டங்களுக்குமான சாத்தியவள அறிக்கைகள் யாரால் தயாரிக்கப்பட்டதென்பதையும்;

      (iii) இதன்படி, இந்த மூன்று கருத்திட்டங்களுக்காகவும் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி மூன்று கருத்திட்டங்களுக்காகவும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் போது திறைசேரியினால் வழங்கப்பட்ட நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;

      (v) 2017 ஆம் ஆண்டுக்காக மேற்படி கருத்திட்டத்தின் சார்பில் வழங்கப்படக்கூடிய நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-25

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-13

பதில் அளித்தார்

கௌரவ தயா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks