பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0390/ ‘10
கெளரவ றஊப் ஹக்கீம்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அக்குரெஸ்ஸ, கொடவத்த வீதி, கொடபிட்டிய முகவரியில் வசிக்கும் திருமதி எம்.ஏ.சித்தி பஸ்லிஹா, அக்குரெஸ்ஸ வ/றுஹுணு பஸ் கம்பனிக்குச் சொந்தமான அக்குரெஸ்ஸ டிப்போவில் தரம் vi ஐச் சேர்ந்த எழுதுவினைஞராகப் பணியாற்றினாரென்பதையும்,
(ii) நிருவாக ரீதியான துர்நடத்தைக் குற்றச்சாட்டின் பேரில் 2004.12.17 ஆம் திகதியிலிருந்து அரைச்சம்பளத்துடன் இவரது சேவை இடைநிறுத்தப்பட்டது என்பதையும்,
(iii) மீண்டும் ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் தீர்மானத்திற்கிணங்க 2005.06.01 ஆம் திகதியிலிருந்து இவர் பதவிநீக்கம் செய்யப்பட்டாரென்பதையும்,
(iv) இது சம்பந்தமாக திருமதி. பஸ்லிஹாவினால் மாத்தறை தொழில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு (இல: L/T/M26/70/2005) தள்ளுபடி செய்யப்பட்டது என்பதையும்,
(v) அதன் பின்னர் தென் மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு (மாத்தறை) மேன்முறையீடொன்றினை (இல: S/P/HCCA/MAL/T06/2009) சமர்ப்பித்தார் என்பதையும்,
(vi) அதற்கிணங்க, 2010.05.04 ஆம் திகதி, நீதிமன்றம் திருமதி. பஸ்லிஹாவை மீண்டும் சேவையில் அமர்த்துமாறும், சேவை இடைநிறுத்தப்பட்ட காலத்துடன் தொடர்புடைய நிலுவைச் சம்பளம் அனைத்தையும் செலுத்துமாறும் கட்டளையிட்டதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி நீதிமன்றக் கட்டளை இற்றைவரை அமுலாக்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்,
(ii) திருமதி. பஸ்லிஹாவை உடனடியாக சேவையிலமர்த்தி நிலுவைச் சம்பளத்தை செலுத்த தாமதமின்றி நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-10-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks