E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1395/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 165 இலக்க மற்றும் 166 ஆம் இலக்க முன்மொழிவுகளுக்கமைய, 7ஆம் நூற்றாண்டு வரையான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கையின் வாசனைத் திரவியங்களை உலகளாவிய ரீதியில் வணிகச் சின்னமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 150 மில்லியன் நிதி ஏற்பாடு செலவிடப்பட்ட விதம் தொடர்பான செலவு விபரம் ஒன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (ii) 2016 ஆம் ஆண்டில் மேற்படி முன்மொழிவுக்கமைய கறுவா, மிளகு, ஏலம் மற்றும் சாதிக்காய் ஆகியவற்றின் பயிர்ச் செய்கைக்காக தவணைக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியின் அளவு எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி தவணைக் குத்தகை பெறுநர்களின் பெயர் பட்டியலை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) 2016 ஆம் ஆண்டில் மேற்படி பயிர்ச் செய்கைக்காக ஊக்குவிக்கப்பட்ட பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் கறுவா ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூபா 50 மில்லியன் நிதி ஏற்பாடு செலவிடப்பட்ட விதம் பற்றி உறுதிசெய்யப்பட்ட செலவு விபரமொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்? 

கேட்கப்பட்ட திகதி

2017-06-22

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-22

பதில் அளித்தார்

கௌரவ தயா கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks