E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1397/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. ​​கௌரவ பந்துல குணவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 162 ஆம் இலக்க முன்மொழிவுக்கமைய தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆராய்ச்சித் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 200 மில்லியன் நிதி ஏற்பாடு மேற்படி மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட விகிதாசாரம் யாதென்பதையும்;

      (ii) தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிறுவனத்துக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) 2002, 2005, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தேயிலை ஆராய்ச்சி, இறப்பர் ஆராய்ச்சி மற்றும் தெங்கு ஆராய்ச்சிக்காக திறைசேரியினால் வழங்கப்பட்ட நிதி ஏற்பாடு ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகிய மூன்று துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-23

பதில் அளித்தார்

கௌரவ நவின் திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks