E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1405/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 1405/ '16

      கெளரவ பந்துல குணவர்த்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 வரவு செலவுத்திட்டத்தின் 176 ஆம் இலக்கம் முன்மொழிவின் பிரகாரம், அலங்கார மீன்வளர்ப்புக் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்கு சலுகை அடிப்படையில் கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஆட்கள் அல்லது நிறுவனங்களின் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (ii) 1977 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டிக்கொள்ளப்பட்ட வௌிநாட்டுச் செலாவணியின் அளவு ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் யாது என்பதையும்;

      (iii) இலங்கையின் அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்வோரின் பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், அலங்கார மீன் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் போது விசேடமாக வழங்கப்பட்ட சலுகைகள் யாவை என்பதையும்;

      (v) 2017 ஆம் ஆண்டுக்கு மேற்படி சலுகைகள் தொடர்ந்தும் செல்லுபடியாகுமா என்பதையும்;

      (vi) அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் கைத்தொழிலை மேம்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக திருப்தியடைய முடியுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks