பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 177 ஆம் இலக்க முன்மொழிவின் படி, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் பயிற்சி நிறுவனத்தில் பாடநெறிகளைக் கற்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை, அவற்றின் பெறுமதி மற்றும் புலமைப்பரிசில் பெறுநர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 1977 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியின் மூலம் ஈட்டப்பட்ட வெளிநாட்டு செலாவணியின் அளவு ஒவ்வொரு வருடத்திலும் வளர்ச்சியடைந்த முறையைக் காட்டும் தரவு அட்டவணையை சமர்ப்பிப்பாரா;
(ii) 2015 ஆம் ஆண்டின் பின்னர் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மூலோபாயங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை;
(iii) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை சீனாவுக்கு இரத்தினக்கல் ஏற்றுமதி தொடர்பில் ஏற்பட்ட போக்குகளை ஒவ்வொரு வருடத்தின் படி சமர்ப்பிப்பாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-22
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-22
பதில் அளித்தார்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks