பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1419/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் 195 ஆம் இலக்க முன்மொழிவுக்கேற்ப, நேரடி வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம்" எனும் நிறுவனமொன்று தாபிக்கப்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் உள்ளடக்கம் மற்றும் பொறுப்புக் கட்டமைப்பு யாதென்பதையும்;
(iii) 1977 முதல் இது வரை இலங்கைக்கு கிடைத்துள்ள மொத்த வௌிநாட்டு முதலீடுகள், முதலீட்டாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன் உள்ளிட்ட நேரடி வௌிநாட்டு முதலீடுகள், கடனின்றிக் கிடைத்த நேரடி வௌிநாட்டு முதலீடுகள் வருட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் நேரடி வௌிநாட்டு முதலீடுகள் வளர்ச்சியடைந்த விதத்தை சுட்டிக்காட்டும் தரவுகள் மற்றும் விளக்க வரைபடத்தையும் மற்றும் முன்னுரிமை வரிசைக் கிரமப்படி நேரடி வௌிநாட்டு முதலீடுகளை நாட்டினுள் பாய்ச்சிய பிரதான ஐந்து நாடுகள் யாவையென்பதை குறிப்பிடுவாரா என்பதையும்;
(v) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நேரடி வௌிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-03
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks