பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1481/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

    1. கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவில் மேமா/மத்து/நவான ஆரம்பப் பாடசாலை மண்சரிவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள இடமாக இனங்காணப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) நவான பிரதேசத்துக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மழை நீடிக்குமானால் பாடசாலையை மூடி விட்டு அத் தினங்களுக்கு பதிலாக விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடாத்துமாறு மத்துகம வலயக் கல்விப் பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) போக்குவரத்து சிரமங்கள் மற்றும் பொருளாதார வசதியீனம் காரணமாக பெற்றோர்களால் தமது பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு அழைத்து செல்ல முடியாதுள்ளதால் ஆபத்தான நிலையிலும் அப்பாடசாலையிலே கற்பிக்க வேண்டி நேரிட்டுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மூன்று நாட்களுக்கான மழை ஒரே நாளில் பெய்யுமானால் அப் பாடசாலையில் வகுப்புகளை நடாத்துவதில் ஆபத்தான நிலைமையொன்று தோற்றுவிக்கப்படாதா என்பதையும்;

      (ii) இந்த ஆபத்தான நிலைமையிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுப்பதற்கு அப் பிரதேசத்தில் வேறொரு பொருத்தமான இடத்தில் நவான ஆரம்ப பாடசாலையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-06

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks