E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1495/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1.  

      கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யான்ஓயா கருத்திட்டத்திற்காக சுற்றயலில் வசித்த பிரதேசவாசிகளின் காணிகள் சுவீகரிக்கப்பட்டதன் காரணமாக பாரம்பரிய 07 குளங்கள் குடிமனைகள் மற்றும் வயல்கள் இந்த நீர்த்தேக்கத்தில் மூழ்கியுள்ளதால் இவர்கள் போக்கிடமின்றி நிர்க்கதியாகியுள்ளனர் என்பதையும்;

      (ii) பிரதேசவாசிகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாது கஜுவத்த பிரதேசத்தில் மனித வாழ்வுக்குப் பொருத்தமற்ற அடர்ந்த வனப் பிரதேசமொன்றை இவர்களுக்கு பகிர்ந்தளிக்க உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) பிரதேசவாசிகள் மல்போருவ கிராமத்திற்கு அருகில், தெற்கு கால்வாயை அண்டியதாக நீர்த்தேக்கத்திற்கு மூழ்காத 600 ஏக்கர் காணியில் 200 ஏக்கர் காணியைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தனர் என்பதையும்;

      (ii) அதன்படி, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் வருகை தந்து மேற்கூறிய காணியிலிருந்து 200 ஏக்கர் மேட்டுக் காணியை துரித கதியில் இந்த மக்களுக்கு வழங்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (இ) எனினும், இதுவரை இவர்களுக்கு குடியிருப்பதற்கான காணிகள் கிடைக்காததால், மேற்படி ஆ(ii) இன் முடிவின்படி உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-28

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-15

பதில் அளித்தார்

கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks