E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0405/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார, பா.உ.,, பா.உ.

    1. 0405/ ‘10

      கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் இதுவரை அறிக்கையிடப்பட்டுள்ள மொத்த எயிட்ஸ் நோயாளர் களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

                 (ii)    அவற்றில் இதுவரை உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

      (iii) குருதி மாற்றுதலினூடாக எயிட்ஸ் நோய்க்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      (iv) போதைப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்துவதால் எயிட்ஸ் நோய்க்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      (v) இந்நோய் ஏற்பட்ட தாயிடமிருந்து நோய் தொற்றுக்கு உள்ளான பிள்ளைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,

      அவர் இச்சபையில் முன்வைப்பாரா?

      (ஆ) (i) சுகாதார அமைச்சினால் 2007,2008,2009 ஆம் ஆண்டுகளில் எயிட்ஸ் நோயாளர் களுக்கு சிகிச்சைக்காக செலவிடப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்பதையும்,

      (ii) எயிட்ஸ் நோய் பரவுவதை தடுப்பதற்காக இற்றைவரை சுகாதார அமைச்சினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் எவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-08-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) கெளரவ (டாக்டர்) ரோஹன புஷ்ப குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks