E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1546/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. கௌரவ விமலவீர திசாநாயக்க,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை, கல்முனை வீதி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வசிக்கும் திரு. டபிள்யு.ஜீ. சிறில் பெரேரா மேற்படி முகவரியில் 17 ஆண்டுகள் தொடர்ந்து வசித்து வருகின்றார் என்பதையும்;

      (ii) மேற்படி காணிக்கு சட்டரீதியான உரிமையை பெற்றுக்கொள்வதற்காக நீண்டகாலமாக விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை பிரதேச செயலகத்தினால் சுற்றறிக்கை இலக்கம் 2008/4 இற்கு அமைவாக நடத்தப்பட்ட காணிக் கச்சேரியொன்றில் 20 பர்ச்சஸ் காணிப் பகுதியொன்றை இவருக்கு பெற்றுக்கொடுக்க விதந்துரைக்கப்பட்டதென்பதையும்;

      (iii) எனினும், மேற்படி காணிப் பகுதியை பல்வேறு காரணங்களை முன்வைத்து பெற்றுக்கொடுக்காமை பற்றி இவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விளக்கமளித்த பின்னர், இவ்வாணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் இறுதியில் இவர் வசிக்கும் காணியை சட்டரீதியாக இவருக்கு பெற்றுக்கொடுக்க விதந்துரைக்கப்பட்டதென்பதையும்;

      (iv) எனினும், இற்றைவரையில் இவருக்கு மேற்படி காணியின் உரிமை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) திரு. பெரேராவிற்கு ஏற்பட்ட மேற்படி பாதிப்பு மற்றும் அநீதிக்கு நியாயமான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-26

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks