பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சிறியளவிலான நீர்ப்பாசன அபிவிருத்திக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகள், ஒவ்வொரு கமநல சேவைப் பிரிவு மற்றும் ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவு;
(ii) அந்நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட குளங்கள் மற்றும் அதற்காக செலவு செய்யப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?
(ஆ) (i) மேற்படி அபிவிருத்தியின் காரணமாக நெல் விளைச்சலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அதன் அளவு எவ்வளவு;
(iii) செலவு செய்யப்பட்ட நிதி ஏற்பாடுகளுக்கமைய, இவ்வுற்பத்தி அதிகரிப்பு போதியதாகக் காணப்படுகின்றதா;
(iv) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) குறிப்பிட்ட வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் சரியான முறையில் நடைபெறவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதால், இவ்வபிவிருத்தி வேலைகள் தொடர்பாக பின்னாய்வு செய்யப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், அதன் விபரங்கள் யாவை;
(iii) இன்றேல், இவ்வபிவிருத்தி வேலைகள் தொடர்பாக பின்னாய்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-20
கேட்டவர்
கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks