பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிண்ணியா, எழிலரங்கு விளையாட்டு மைதானம் கடந்த சில வருடங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றதென்பதையும்;
(ii) அதன் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவென்பதையும்;
(iii) அதனூடாக செயற்படுத்தப்படுகின்ற பணிகள் யாவையென்பதையும்;
(iv) அப்பணிகள் பற்றி அங்கே இருக்கின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) எழிலரங்கு விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடு ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) அதன் மூலமாக செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் யாவையென்பதையும்;
(iii) திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண சபை அறியாத வகையில் அமைச்சு நேரடியாகவே மேற்படி அபிவிருத்தி பணிகளை செயற்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;
(iv) அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கின்ற ஒப்பந்தகாரர் யாரென்பதையும்;
(v) மேற்படி ஒப்பந்தகாரருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;
(vi) நீண்ட காலமாகியுள்ள போதிலும், அபிவிருத்திப் பணிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் வௌிப்படைத்தன்மை காணப்படுவதை உறுதிப்படுத்துவாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-20
கேட்டவர்
கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks