E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1569/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

    1.  

      கௌரவ இம்ரான் மஹரூப்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்ட மூலங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு மூலத்திலிருந்தும் ஒதுக்கப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) அதற்கென செலவிடப்பட்ட மொத்தச் செலவு எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இவ் விளையாட்டு மைதானம் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டதென்பதையும்;

      (ii) அதன் நினைவுப் பலகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின் பெயர்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (இ) (i) மேற்படி பெயர்கள் குறிப்பிடப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;

      (ii) அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலையில் இவர்களுடைய பெயர்கள் மேற்படி நினைவுப் பலகையில் குறிப்பிடப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி விளையாட்டு மைதானத்துக்கு இடப்பட்டுள்ள பெயர் தொடர்பாக ஏற்புடைய செயல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) அரச நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஒரு கட்சிக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து கட்சியொன்றுக்கு பிரச்சாரத்தை தேடித்தருவது நல்லாட்சியின் ஓர் பண்பாகுமென ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (v) இத் தவறை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-08

பதில் அளித்தார்

கௌரவ பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks