E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1577/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1.  

      கெளரவ எஸ். சிறீதரன்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் - மன்னார் A-32 வீதி மறுசீரமைக்கப் பட்டதென்பதையும்;

      (ii) ஆயினும், அந்த வீதியில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் மறுசீரமைக்கப்படவில்லை என்பதையும்;

      (iii) இந்த பாலத்தின் ஊடாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு பயணிக்க வேண்டுமென்பதையும்;

      (iv) இலுப்பைக்கடவை, முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தேவைப்படுகின்ற நோயாளிகள் இந்த வீதியின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகையில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளனவென்பதையும்;

      (v) பாலம் சீரழிந்துள்ளமையால் கடந்த மழைக்காலங்களில் இந்த வீதி பயணஞ்செய்ய இயலாதவாறு பல வாரங்கள் தடைப்பட்டிருந்ததென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) பாலம் நிர்மாணிக்கப்படுவதாக அறிவித்தல் பலகையொன்று பொருத்தப்பட்டு அவசியமான பொருட்கள் அங்கு கொண்வரப்படுள்ள போதிலும் இற்றைவரை மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

      (ii) மண்டைக்கல்லாறு பாலத்தை மறுசீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நேர்ந்தது;

      (iii) அந்தப் பணம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதா;

      (iv) ஆமெனில் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாவர்;

      (v) இந்த பாலம் மறுசீரமைக்கப்படும் திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-26

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-26

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks