பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில் சுற்றாடல் மாசடைதல் சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;
(ii) முறைப்பாடுகளின் வகைப்படுத்தலுக்கமைய அதிகளவில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் யாவை;
(iii) கிடைத்துள்ள முறைப்பாடுகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் முன்னங்கீகாரத்துடனான நிறுவனங்கள் சம்பந்தமாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;
(iv) அந்நிறுவனங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சட்டவிதிகளுக்கு அமைவாக செயலாற்றி உள்ளனவா;
(v) மாத்தறை மாநகர ஆளுகைப் பிரதேசத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கல் வேலைத்தலங்களால் இடம்பெறுகின்ற சுற்றாடல் மாசடைதல் பற்றி பரிசோதிக்கப்பட்டுள்ளதா;
(vi) நீரில் கன உலோகங்கள் சேர்தல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் சம்பந்தமாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்கள் யாவை;
(vii) மேற்படி பரிசோதனைகளின் முடிபுகள் யாவை;
(viii) மத்திய சுற்றாடல் அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பொருட்படுத்தாமல் விட்டுள்ள எத்தனை நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-11
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-11
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks