E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1592/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. கௌரவ அசோக் பிரியந்த,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் கமநல சேவை நிலைய ஆளுகைப் பிரதேசங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அந்த ஆளுகைப் பிரதேச நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படியான ஆளுகைப் பிரதேசம் ஒன்றிலிருந்து உர மானியத்திற்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

      (iv) மேற்படி விவசாயிகளில் உர மானிய பணத்தொகையைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (v) உர மானிய பணத்தொகை வழங்கப்படவிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (vi) இதுவரை உர மானிய பணத்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு அத்தொகையை வழங்கவுள்ள திகதி யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-10

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks