E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1608/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சிரேஷ்ட பிரசைகளின் ரூபா 1.5 மில்லியன் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 15% வட்டியை வழங்கக் கோரும் சுற்றறிக்கையொன்று அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதென்று 2016.11.21 ஆந் திகதி அல்லது அதை அண்மித்த திகதியொன்றில்​ தொலைக்காட்சி நேர்காணலொன்றின் போது அப்போதைக்கு இருந்த நிதி அமைச்சர் குறிப்பிட்டார் என்பதையும்;

      (ii) அதற்கு மாறாக, தேவையான அறிவுறுத்தல்களுடன் சுற்றறிக்கைகளை இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பியதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிடப்பட்ட அந்த பணிப்புரையை நிறைவேற்றத் தவறியுள்ளது என்று குறிப்பிட்டதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) 2017.01.31 ஆந் திகதி வரைக்கும் அரச வங்கிகள் உள்ளடங்கலாக அனைத்து வங்கிகளும் அந்த சுற்றறிக்கையை அமுல்படுத்தியிருக்கவில்லை என்பதையும்;

      (ii) அதனால் சிரேஷ்ட பிரசைகளுக்கு ஏற்பட்ட நட்டம் இலட்சக்கணக்கான ரூபாய்களாகும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (இ) (i) வங்கிகளால் அமைச்சரின் சுற்றறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை அல்லது அடிப்படையையும்;

      (ii) அமைச்சர் 2015 நவம்பர் மாதத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க எந்தத் திகதியிலிருந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைபபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும்;

      (iii) அமைச்சரின் குறிப்பிடப்பட்ட அந்த பணிப்புரை விடுக்கப்பட்ட திகதியிலிருந்து சிரேஷ்ட பிரசைகளுக்கு இழப்பீடுகளை கௌரவ அமைச்சர் செலுத்துவாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-24

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-25

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks