பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஹேஷான் விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ள இராணுவ முகாம்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி முகாம்களை இடம்பெறச் செய்வதற்கு நிரந்தரமாகக் காணிகள் வழங்கப்பட்டுள்ளதா;
(iii) எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா குளத்துக்கு அருகாமையிலுள்ள இராணுவ முகாமுக்கு காணி வழங்கப்பட்டுள்ள அடிப்படை யாது;
(iv) இக்காணியின் உரிமையாளர்கள் யாவர்;
(v) இக்காணியில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுவதால் அதன் சுற்றுப்புற மக்களுக்கும் சந்திரிக்கா குளத்தை அன்றாடம் உபயோகிக்கும் மக்களுக்கும் கடும் சிரமம் ஏற்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(vi) குளத்துக்கான ஒதுக்குப் பிரதேசத்தில் நிரந்தர கட்டிடங்களை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா;
(vii) ஆமெனில், அதற்காக அனுமதி வழங்கியுள்ள நிறுவனங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-08
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-08
பதில் அளித்தார்
கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks