E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1624/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 1624/ '17

      கௌரவ ஹேஷான் விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தேசிய வருமானத்திற்கு பெரும் சக்தியாகவுள்ள இரத்தினக்கல் கைத்தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்ற இரத்தினபுரி மாவட்டத்தில் மரபுவழியிலான இரத்தினக்கல் கைத்தொழிலாளர்கள் தற்போது அக்கைத்தொழிலை இழந்துவருகின்றனர் என்பதையும்;

      (ii) மேற்படி கைத்தொழிலில் பாரிய அளவில் ஈடுபட்டுள்ள சில வியாபாரிகளுக்கு மத்தியில் மரபுவழியிலான இரத்தினக்கல் கைத்தொழிலாளர்கள் கூலியாட்களாகியுள்ள நிலைமை உருவாகியுள்ளதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) தற்போது பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி அகழ்வுகளை மேற்கொள்ள பாரிய அளவிலான சுரங்கக் கைத்தொழிலுக்கு உரிமப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், உரிமப்பத்திரம் பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) பாரம்பரிய சுரங்கக் கைத்தொழிலுக்கு பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதன் மூலம் மரபுவழியிலான சுரங்க தொழிலாளர்களுக்கு அநீதியும் அதேபோன்று, பாரிய சுற்றாடல் சேதமும் ஏற்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) இந்த நிலைமையை தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-04

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks