பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1625/ '17
கௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் பாடசாலை முறைமையினுள் பிரசித்திபெற்ற பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்க முயற்சிப்பதன் மூலம் அதிக அளவிலான கிராம பாடசாலைகள் மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஐம்பது மாணவ, மாணவிகளுக்குக் குறைவாகவுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேலே (ii) இல் குறிபிட்டுள்ள எண்ணிக்கை, மாவட்ட வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இரத்தினபுரி மாவட்டத்தின், எம்பிலிபிட்டிய கல்வி வலையத்தில் கொடகவெல கோட்டத்தில் அமைந்துள்ள கோம்பிட்டி வித்தியாலயம் தற்போது மூடப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலை மூடப்படுதல் தொடர்பாக மாகாண கல்வித் திணைக்களம் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் விழிப்புணர்வூட்டப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) ஆமெனில், தன்னிச்சைப்படி பாடசாலையை மூடிவிட்டு அதிலிருந்த பொருட்களையும் தான்தோன்றித்தனமாக பகிர்ந்தளித்தமை தொடர்பாக பாடசாலை அதிபர் உட்பட கோட்ட மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) இது தொடர்பாக எடுக்கப்டும் எதிர்கால நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-06
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks