பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1626/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. கௌரவ ​எஸ். சீ. முத்துகுமாரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தம்புத்தேகம வைத்தியசாலை, மத்திய மாகாண சபைக்குச் சொந்தமான அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியசாலையாகும் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, கல்னேவ, ராஜாங்கனய, தலாவ, இப்பலோகம மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மற்றும் வடமேல் மாகாணத்தின் மஹவ, கல்கமுவ மற்றும் மீகலாவ ஆகிய பிரதேசங்களையும் சேர்ந்த நோயாளிகள் இவ்வைத்தியசாலை யிலிருந்து சிகிச்சை பெறுகின்றனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி வைத்தியசாலையின் முதலாம் வாட்டில்/ திடீர் விபத்துக்கள் வாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி வாட்டிலுள்ள கட்டில்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி திருப்தியடைகின்றாரா என்பதையும்;

      (iv) மேற்படி வைத்தியசாலைக்கு கடந்த ஆண்டில் புதிய வாட்டுத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (v) இற்றை வரை அதன் வேலைகள் முடிவடையாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (vi) புதிய கட்டடத்தின் வேலைகளை பூர்த்திசெய்து அதை திறந்து வைப்பதற்கு தலையீடு செய்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-10

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-10

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks