E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1629/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

    1. கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "சூர்ய பல சங்கிராமய" கருத்திட்டத்தின் கீழ் இற்றைவரை சூரிய மின்சக்தி இணைப்புகளை பெற்றுக்கொண்டுள்ள பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) "சூர்ய பல சங்கிராமய" வேலைத்திட்டத்தின் கீழ் பாவனையாளரொருவர் இலங்கை மின்சார சபைக்கு வழங்குகின்ற மின்சார அலகொன்றுக்காக செலுத்தப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) ஆரம்ப கருத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் 5 ஆண்டு காலத்திற்குள் தேசிய முறைமைக்கு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்டுகின்ற மின்சாரத்தின் கொள்ளளவு எவ்வளவென்பதையும்;

      (iv) சூரிய மின்சக்தியை தேசிய முறைமைக்கு சேர்துக்கொள்வது தொடர்பாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் காட்டப்படுகின்ற மந்தகதியிலான கொள்கைக்கான காரணம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks