E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1643/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இற்றைவரை,

      (i) மத்திய அரசினால் ஊவா மாகாணத்திற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) ஊவா மாகாண சபையினால் மீண்டெழும் செலவினமாக ஒதுக்கப்பட்ட பணத் தொகையானது பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகையின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

      (iii) மீண்டெழும் செலவினத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iv) மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட பணத்தொகையானது பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகையின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

      (v) மூலதனச் செலவினத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks