E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1645/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 1645/ '17

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தகாரர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அந்த ஒப்பந்தகாரர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) தற்போதைய ஊவா மாகாண சபை முதலமைச்சர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தகாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு ஒப்பந்தம் சார்பாகவும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்களுக்கு மாகாண சபையினால் செலுத்தப்பட்டுள்ள பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (v) சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது மாகாண சபையினால் பின்பற்றப்பட்ட முறையியல் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-17

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks