E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1676/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

    1. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இலங்கையில் கல்விக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கைநெறிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் பெயர்களையும் போதனாமொழி ரீதியாக அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) (i) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் நடாத்தப்படும் கற்கைநெறிகளின் பெயர்களையும்;

      (ii) ஒவ்வொரு கற்கைநெறியிலும் பயிற்சியை மேற்கொள்ளும் பயிலுநர்களின் எண்ணிக்கையையும்;

      (iii) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் சாத்தியமான ஏனைய தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகள் நடாத்தப்படாமைக்கான காரணத்தையும்;

      (iv) மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் சாத்தியமான ஏனைய தமிழ் மொழி மூலமான கற்கைநெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (v) அத்தகைய கற்கைநெறிகளை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான விரிவுரையாளர்கள் இல்லையா என்பதையும்;

      (vi) அவ்வாறெனில், அத்தகைய விரிவுரையாளர்கள் வகுதியொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks