பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு பார் வெளிச்சவீடு சந்தியிலிருந்து கல்குடா வரை கடற்கரை ஓரமாக மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதிக்கு சமாந்தரமான வீதியொன்று ஏறாவூர் வரை பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) இந்த வீதிக்கு அருகாமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் சில ஏனைய நிறுவனங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால், மட்டக்களப்பு – வாழைச்சேனை வீதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை இந்த வீதி இலகுவாக்கி, பொதுமக்களுக்கு வசதியாகவுள்ளது என்பதையும்;
(iii) இந்த வீதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கரையோரமாக பாசிக்குடா வரை பயணிப்பதற்கு இலகுவாகவும், வசதியாகவுமுள்ளது என்பதையும்
(iv) ஆழ்கடல் மீனவர்களின் மீன்படி நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்கு இது வசதியாகவுள்ளதென்பதையும்;
(v) திராய்மடு கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட குடியிருப்பாளர்கள் நன்மையடைவர் என்பதையும்; அத்துடன்
(vi) இந்த வீதி வழியே சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களையும் ஏனைய தாபனங்களையும் நிர்மாணிப்பதற்கு இது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் என்பதையும்
அவர் அறிவாராரா?
(ஆ) மேற்காண் தகவல்களையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு இந்த வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே வழங்கப்படுமா என்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-20
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks