E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1682/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

    1. கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) ஒக்கம்பிட்டிய, கந்துருவெலானவைச் சேர்ந்த திரு டீ. எம். ஜயதிஸ்ஸ 1983 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இணைந்து பொ.கா. 5439 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இலக்கத்தின் கீழ் சேவையாற்றியுள்ளார் என்பதையும்;

      (ii) பொலிஸ் அதிரடிப் படையில் 09 ஆண்டுகள் அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் சேவையாற்றியுள்ளார் என்பதையும்;

      (iii) 1994 ஆம் ஆண்டில் பொய்க் குற்றச்சாட்டொன்றின் பேரில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற பொது மனுக் குழுவிற்கு விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, மீளச் சேவையில் அமர்த்துமாறு வழங்கப்பட்ட கட்டளை நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக 03 சந்தர்ப்பங்களில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரீசிலித்து இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதை பொது மனுக் குழு தீர்மானித்து நிலுவைச் சம்பளங்களுடன் மீள சேவையில் அமர்த்துமாறு மேற்கொள்ளப்பட்ட கட்டளையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மீளச் சேவையில் அமர்த்துமாறு பொது மனுக் குழுவினால் 03 சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட கோரிக்கையை உதாசீனப்படுத்தியமை இவருக்கு செய்யப்பட்ட பாரிய அநீதி என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) பொது மனுக் குழுவின் கட்டளையை நடைமுறைப்படுத்தி திரு. ஜயதிஸ்ஸவை மீளச் சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-22

கேட்டவர்

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-22

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks