E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1683/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

    1. கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) 1987 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முனங்குடிச்சி கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஏறாவூர் புன்னகுடா மீனவக் கிராமத்தில் குடியிருந்த திரு. டபிள்யு. ஹரிசன் பர்னாந்து உள்ளிட்ட கிராமவாசிகள் மீது புலிப் பயங்கரவாதிகளால் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள் என்பதையும்;

      (ii) அச் சம்பவத்தினால் இவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம், வாகனங்கள் மற்றும் இவருக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்துள்ளாரென்பதையும்;

      (iii) ஆட்கள், சொத்துக்கள் மற்றும் கைத்தொழில் புனர்வாழ்வளிப்பு அதிகாரசபையினால் 1996.03.14 ஆம் திகதிய கடிதம் மூலம் மேற்படி விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை இவர் உள்ளிட்ட மேற்படி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கேற்பட்ட சேதம் தொடர்பாக எந்தவொரு நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மொணறாகல மாவட்டத்தின் வெல்லவாய, வருணகம எனப்படும் கிராமத்தில் தற்போது குடியிருக்கும் திரு. ஹரிசன் பர்னாந்துவிற்கு ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீட்டுத் தொகையொன்றை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இழப்பீட்டுத் தொகை செலுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-24

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks