பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாறை மாவட்டத்தில், லாஹுகல பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்குகின்ற மொத்த நிலப்பரப்பு எவ்வளவென்பதையும்
(iv) அதன் கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) அக் கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்கள் மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்படுகையில் உத்தியோகபூர்வமாக எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி பிரதேச செயலகத்துக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் கிராம அலுவலர் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது வழிநடத்தல் நடவடிக்கைகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அக் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-06
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks