பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1686/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

    1. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசியப் பாடசாலைகளின் பெயர்களையும்;

      (ii) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அவர்களின் தரவாரியாகவும்;

      (iii) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை அவர்களின் வகுதி வாரியாகவும்;

      (iv) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் பதவியணியை பாடவாரியாகவும்;

      (v) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரிய வெற்றிடங்களின் எண்ணிக்கையை அவற்றின் வகுதிவாரியாகவும்;

      (vi) ஒவ்வொரு தேசியப் பாடசாலையிலுமுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடங்களின் பெயர்களையும்; அத்துடன்

      (vii) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் மொழி ஆய்வுகூடங்கள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ள தேசியப் பாடசாலைகளின் பெயர்களையும்

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) (i) அவர் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும்;அத்துடன்

      (ii) மேற்சொன்ன வெற்றிடங்கள் நிரப்பப்படும் திகதியையும்

      அவர் இச்சபைக்கு மேலும் தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-20

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-20

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks