E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1689/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

    1. கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— மலை நாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014 ஆம் ஆண்டில் மத்துகம, வோகன் தோட்டத்தின், கீழ்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் 14 குடும்பங்கள் கடும் இடர்காண் நிலைமையில் இன்னமும் அங்கு குடியிருக்கின்றனர் என்பதையும்;

      (ii) இவ்விடத்திலிருந்து இம்மக்களின் குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென 2014 யூன் மாதத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தோட்ட முகாமைத்துவத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) மாற்று இடங்களை ஒதுக்குதல் தொடர்பில் தோட்ட முகாமைத்துவத்துக்கும் இம்மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மாற்றுக் காணிகளை வழங்குதல் தாமதமாகியுள்ளது என்பதையும்;

      (iv) இதனையொத்த மண்சரிவு ஆபத்து காணப்படுகின்ற அகலவத்த, டெல்கித் தோட்டத்தில், இலுப்புவத்த பகுதியிலும் 21 குடும்பங்கள் கடந்த ‍சுமார் 2 வருட காலமாக வசிக்கின்றனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேலே குறிப்பிட்டவாறு பாதிப்புக்குள்ளாகி, உயிர் ஆபத்துக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்காக ஏதேனும் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;

      (ii) ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-24

பதில் அளித்தார்

கௌரவ பழனி திகாம்பரம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks